Sunday, December 19, 2010

நான், நீ , நமது

நேரத்தில் சொல்லபடாத காதல் 
நேரத்தில் ஊக்கு விக்கபடாத முயற்சி 
நேரத்தில் சந்திக்காத நண்பன் 
நேரத்தில் பாரட்ட மறந்த உழைப்பு 
நேரத்தில் கேட்க மறந்த மன்னிப்பு
நேரத்தில் செய்ய முடியாத செயல் 

வருந்தி பயனில்லை , பலன் உண்டு 
இதை உணர்ந்திருந்தால்  !!!!
தடம் தெரியாமல் செல்லும் வாழ்க்கையில் 
இடம் அறிந்து செயல் பட வேண்டும் 

உன் வாழ்கையில் உன்னுடன் உனக்கு பின் 
இருப்பது எது ? நீ கற்ற கல்வி அன்று ,
 செல்வம் அன்று, உன் மக்கள் அன்று
நீ செய்த ஈகை , நீ வென்ற இதயங்கள் ..
நாளைய வரலாற்றின் பக்கங்கள் 
இன்று நீ செய்யும் நன்மையின் வித்து 

நாமாய் இருக்க பழகு உனது பயணம்
ஒளி யின் வேகத்தை மிஞ்சும்!!!
பேச்சில், எழுத்தில், செயலில் 
விவேகம் வளரும் !!!
சாமான்யன் போல சுவடு தெரியாமல் போவதும் 
அசாதாரன மனிதனாய் விழுது உண்டு நிற்பதும்
உன் கையில் !!!!

தொடக்கம் ....
சண்முகவேல் 


No comments:

Post a Comment